பண வரவை அதிகப்படுத்தும் உப்பு கட்டி.. எந்த இடத்தில் வைக்கணும் தெரியுமா?
பொதுவாக வீடுகளில் கஷ்டப்பட்டு உழைத்த பணம் தங்வில்லையென்றால் கவலையாக இருக்கும்.
இந்த நிலை உங்களுக்கும் இருக்கிறது என்றால் வீட்டில் பணம் நிலைத்திருக்க உப்பை பயன்படுத்தி சில பரிகாரங்கள் செய்யலாம்.
சமையலுக்காக பயன்படுத்தப்படும் உப்பு, ஆன்மீக செயற்பாடுகளுக்கு பயன்படுகிறது.
ஜோதிட சாஸ்திரம் படி, உப்பு வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை துரத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் வீட்டிற்கு செல்வம் அதிகரிக்கவும் உதவியாக இருக்கிறது.
அந்த வகையில் சமையலுக்காக பயன்படும் உப்பை வைத்து எப்படி அதிர்ஷ்டத்தை பெருக வைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கல்லுப்பு பரிகாரம்
1. வீட்டின் மூலைகளில் சிறிதளவு கல் உப்பை வைக்கவும். இப்படி செய்வதால் வீட்டில் இருக்கும் எதிர்மறையான சக்திகளும் விரட்டியடிக்கப்படுகின்றன. அத்துடன் பண வரவு அதிகமாகும்.
2. ஒரு சின்ன பிளாஸ்டிக் பையில் ஒரு ஸ்பூன் அளவு கல் உப்பு போட்டு உங்கள் பணப்பையில் வைக்கவும். இதனை 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றவும். இப்படி செய்வதால் பண வரவு அதிகமாகும்.
3. பண பிரச்சனை அதிகரித்து வந்தால் ஒரு கண்ணாடி டம்பளரில் கல் உப்பு, 5 கிராம்பு போடவும். இதனை வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் வைக்கவும். குறித்த பரிகாரம் செய்தால் வீட்டில் இருக்கும் பணப்பிரச்சினை குறையும். அத்துடன் பண வரவும் அதிகமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |