பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிவாஷினிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினம் வெளியான நிவாஷினி வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது ஆறாவது வாரம் செல்கிறது. இதில் 15 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து மக்களின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இதன்படி, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, செரீனா , மகேஷ்வரி மற்றும் நிவாஷினி வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலிருந்து அசீம் வெளியேற்ற வேண்டும் என்று போட்டியாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் இவர்களின் கருத்துக்கு மாறாக நிவாஷினி வெளியேற்றப்பட்டுள்ளார்.
நிவாஷினிக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம்
இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான நிவாஷினியும் அசல் கோளாறும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய போது அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து தன்னை ஒரு மாடலாக அறிமுகப்படுத்தி மக்களின் மனதை வென்ற நிவாஷினிக்கு பிக்பாஸில் நாள் சம்பளமாக ரூ. 12 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரம் சம்பளமாக பேசப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.