புத்தாண்டில் இப்படி சக்கரை பொங்கல் செய்ங்க சுவை அள்ளும் - ரெசிபி இதோ
இந்த தமிழ் பத்தாண்டை வரவேற்க வீட்டில் அனைவரும் சக்கரை பொங்கல் செய்வார்கள். இந்த சக்கரை பொங்கலை எப்படி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

சக்கரை பொங்கல்
தமிழர்களின் எந்த பண்டிகையிலும் பொங்கல் இடம் பெறும். இது பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் மற்றும் நெய் சேர்த்து பாரம்பரியமாக செய்யப்படும் ஒரு உணவாகும்.
இந்த சக்கரை பொங்கலை விரும்பி சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை. அந்தவகையில் இந்த தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தித்திக்கும் சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போல எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பச்சரிசி – 1 கப்
- பாசிப்பருப்பு – ¼ கப்
- வெல்லம் – 1 முதல் 1½ கப்
- தண்ணீர் – 3 முதல் 4 கப்
- பால் – ½ கப்
- நெய் – 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
- முந்திரி – 10 முதல் 15
- திராட்சை – 10 முதல் 15
- ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
- பச்சை கற்பூரம் – ஒரு சிட்டிகை (விருப்பம்)

செய்முறை
சக்கரை பொங்கல் செய்ய முதலில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து, எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பச்சரிசியுடன் அந்த பருப்பை சேர்த்து கழுவி, தண்ணீர் மற்றும் பால் சேர்த்து நன்றாக வேக விடவும்.
இது நன்றாக வேக வைக்க வேண்டும் குக்கர் என்றால் நான்கு விசில் போதுமானது. பின்னர் பாகு தயாரிக்க வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சற்றே கெட்டியாகும் வரை காய்ச்சவும்.

இதில் வேகவைத்த அரிசி பருப்பு கலவை சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறவும். பின் ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரம் சேர்க்கவும். கற்பூரம் விருப்பம் என்றால் சேர்க்கலாம். இது சேர்க்க காரணம் கோவில் பிரசாதம் போலே இந்த பொங்கல் வருவதற்கு தான்.
கடைசியாக நெய்யில் முந்திரி பொன்னிறமாக வறுத்து, திராட்சை சேர்த்து அதை பொங்கலில் சேர்த்து நன்கு கிளறவும். அவ்வளவு தான் பரிமாற முன்னர் கொஞ்சம் நெய் ஊற்றி பரிமாறினால் சுவை அள்ளும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |