தனுஷின் அரசியல் வருகை குறித்து சாய் பல்லவி சொன்ன விஷயம் - வைரலாகும் வீடியோ!
Sai Pallavi Reacts to Dhanush’s Political Entry : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ள கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரசியல் பயணத்திற்குத் தயாராகும் தனுஷ்?
கடந்த ஓராண்டாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை தனுஷ் சந்தித்து வருகிறார். ரசிகர் மன்றத்தை வலுப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கையை அதிகரிப்பது, நலத்திட்ட உதவிகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில், தனுஷ் ரசிகர் மன்றம் இனி இயக்கமாகச் செயல்படும் என அதன் தலைவர் சுப்பிரமணிய சிவா அறிவித்ததுடன், புதிய லோகோவையும் வெளியிட்டார். இதனால் தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
தனுஷுக்கு சாய் பல்லவி தெரிவித்த வாழ்த்து
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற 'ஓம்' திரைப்பட நிகழ்ச்சியில் தனுஷின் ரசிகர்கள் கொடிகளுடன் பங்கேற்றிருந்தனர். இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த நடிகை சாய் பல்லவி, நிகழ்ச்சியில் பேசும்போது தனுஷின் அரசியல் வருகை குறித்தும் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசுகையில், “விழாவிற்கு வரும்போது வெளியே கொடிகளைப் பார்த்தேன். என்ன இது, அரசியல் கூட்டம் போல இருக்கிறதே என்று தோன்றியது. தனுஷ் சார், நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆனால், விஜய் சார் இப்போதுதான் அரசியலில் நுழைந்து நடிப்பை விட்டுவிட்டார். நீங்கள் தொடர்ந்து நடிக்க வேண்டும். உங்களைப் போன்ற ஒரு யதார்த்தமான, சிறந்த நடிகரை நாங்கள் இழக்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.

விஜய் பெயரைக் குறிப்பிட்டபோது எழுந்த ஆரவாரம்!
தனுஷின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்த அதேவேளையில், அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என சாய் பல்லவி கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, தனது பேச்சில் விஜய்யின் பெயரைக் குறிப்பிட்டபோது அரங்கில் எழுந்த ரசிகர்களின் ஆரவாரமும் தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தனுஷின் அரசியல் வருகை விஜய்யின் அரசியல் பயணத்துடன் ஒப்பிடப்பட்டு வரும் சூழலில், சாய் பல்லவியின் இந்தக் கருத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SaiPallavi's Request to #Dhanush: "When I saw the flags outside, it felt like a political gathering. Whatever you do, I wish you the very best. But Vijay sir has just entered politics and quit acting. I was really hoping and praying that Dhanush sir would continue acting because we don't want to miss out on a realistic and great performer like him.."🤝 https://t.co/Opranqa5OC
— Laxmi Kanth (@iammoviebuff007) November 15, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |