சாய் பல்லவி குறித்து முக்கிய விடயத்தை வெளியிட்ட நாக சைதன்யா... வைரலாகும் தகவல்
நடிகை சாய் பல்லவி இயக்குநராக விரைவில் களமிரங்கவுள்ளதாக நடிகர் நாக சைதன்யா பேட்டியொன்றின் வெளியிட்டுள்ள தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சாய் பல்லவி
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக 'மலர் டீச்சர்' கதாப்பாத்திரத்தில் அறிமுகமான சாய் பல்லவி.முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
இவரின் இயற்கை அழகால் ரசிகர்களின் கனவு கன்னியான வலம் வரும் சாய் பல்லவிக்கு பிரேமம் படத்தை தொடந்து மலையால திரைப்படங்களில் வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.
தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர், அதனை தொடர்ந்து தனுஷின் மாரி 2, சூர்யாவின் NGK போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு பாராட்டுகளை பெற்றுக்கொடுத்ததுடன் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
தற்போது சாய் பல்லவி பாலிவுடிலும் அறிமுகமாகவுள்ளார். ஹிந்தியில் தயாராகிவரும் ராமாயணம் படத்தில் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.
அதுமட்டுமன்றி நாக சைதன்யா நடிப்பில் `தண்டேல்` படத்தில் கதாநாயகழயாக நடித்துள்ளார். இந்த படம் இன்று திரைக்குவந்து வெற்றிநடை போட்டு வருகின்றது.
இந்நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது நாக சைதன்யா சாய் பல்லவி இயக்குநராக போவதாகவும் அதில் நாக சைதன்யாவுக்கு ஒரு கதாப்பாத்திரம் தருவதாகவும் கூறிய தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |