பல வருட காதலை சீக்ரெட்டாக வைத்திருந்த சாய் பல்லவி- அவர் வாயால் சொன்ன Good News
நடிகை சாய் பல்லவி, தன்னுடைய காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாய் பல்லவி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சாய் பல்லவி.
இவர் பிரேமம் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
இவருடைய படங்கள் தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வரவேற்கப்படுவதால் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
10 வருடங்களாக காதலிக்கிறேன்..
இந்த நிலையில் சாய் பல்லவி 10 வருடங்களாக காதலிப்பதாகவும், அவருடைய காதலர் பற்றியும் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அதில், “நான் பத்து வருடங்களாக ஒருவரை காதலித்து வருகிறேன். அவர் வேறு யாரும் அல்ல.
மகாபாரத கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “யாரோ நடிகரை சொல்லப் போகிறார் என்று பார்த்தால், அப்படி சொல்லிவிட்டாரே” என்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |