திருமணமான நடிகருடன் உறவா? சர்ச்சையை கிளப்பி விட்ட விஷமிகள்- கொந்தளிக்கும் ரசிகர்கள்
நடிகை சாய்பல்லவி, திருமணமாகிய நடிகர் ஒருவருடன் உறவில் இருப்பதாக வெளியாக சர்ச்சைக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி வருகின்றது.
சாய் பல்லவி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியவர் தான் நடிகை சாய்பல்லவி.
இதனை தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகிய பிரேமம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் மலர் டீச்சராக பிரபலமாகிய சாய்பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிப்படங்களிலும் முக்கிய நடிகையாக வளர்ந்து வந்திருக்கிறார்.
கொந்தளிக்கும் ரசிகர்கள்
இந்த நிலையில் சமீபக் காலமாக சாய்பல்லவி பற்றிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சாய் பல்லவியுடன் உறவில் இருக்கும் நடிகர் ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது.
ஆனால், இந்த செய்தி எந்தளவு உண்மை என தெரியவில்லை.
மாறாக சாய் பல்லவி குறித்து பரவும் வதந்திகளுக்கு ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |