அற்புதங்களுக்கு ஆஸ்தான கடவுள் சாய்பாபா!
தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அதிசய அற்புதங்களை நிகழ்த்திக் கொடுப்பவர் தான் சாய்பாபா.
20ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பத்தில் வாழ்ந்த இந்திய குருதான் சாய்பாபா.
இவர் இந்தியாவில் பிறந்த சிறந்த துறவிகளில் சாய்பாபாவும் ஒருவர் தான். சாய்பாபாவை பற்றி நீங்கள் அறிந்திடாத பல தகவல்களைத் தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
சாய்பாபாவின் தோற்றம்
பாபா தனது 16வது வயதில் இந்தியாவில் மகாராஷ்டிராவின் ஷீரடி கிராமத்திற்கு முதல் முறையாக வந்தார். இவர் இளவயதில் ஒரு வேப்ப மரத்தடியில் அமர்ந்து பல நாட்களாக உணவும் தண்ணீரும் இல்லாமல் ஆழ்ந்த தியானம் செய்து கொண்டிருப்பார்.
இவ்வாறு ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பாபாவைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். பிறகு அப்படியே அவ்வூரில் உள்ள பயாஜாபாய் என்றப் பெண் பாபாவிற்கு உணவு கொடுத்து தாயானார்.
படிப்படியாக பாபா தனது தங்குமிடத்தை அருகிலுள்ள மசூதிக்கு மாற்றினார். ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் பாபாவை தரிசித்து வந்தனர். மசூதியில் பாபா துனி என்று அழைக்கப்படும் புனித நெருப்பை பராமரித்தார். பாபா பார்வையாளருக்கு புனித சாம்பலை வழங்கினார்.
அனைத்து உடல்நலப் பிரச்சினைகளுக்கும் சாம்பல் சிறந்த மருந்து என்று மக்கள் நம்புகிறார்கள். பாபா அனைவருக்கும் கடவுள் மற்றும் அனைத்து மத விழாக்களிலும் பங்கேற்பார். பாபாவிற்கு சமைக்கும் பழக்கம் இருந்தது, அதுவே அவர்கள் வருகையின் போது அனைத்து பக்தர்களுக்கும் "பிரசாதமாக" விநியோகிக்கப்பட்டது.
பாபாவிடம் நோயைக் குணப்படுத்த வேண்டும், பிரச்சினைகள் தீர வேண்டும் என்று வேண்டி நிற்க அவரும் வருபவர்களுக்கு ஆசி வழங்கி பல அற்புதங்களை நிகழ்த்தி ஆன்மீக போதனைகளை, தத்துவங்களையும் கூறி இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் இறைவனாகப் போற்றப்பட்டார்.
சாய்பாபா 20ஆம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் அறியப்பட்ட சாய்பாபா ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்டார். இவ்வாறு உலகப் புகழ்பெற்ற சாய்பாபா 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் உலகத்தை விடுத்து இறைவனிடம் சேர்ந்து இறைவனாக இன்று வரை போற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இவர் மகாராஷ்டிராவில் இருந்து சீரடியில் சமாதியான இடம் தற்போது வரை புனித தலமாக மாறியிருக்கிறது.
சாய்பாபாவின் பொன்மொழிகள்
- நீ நிச்சயம் முன்னேறுவாய்.. உன் மனதில் எதிர்காலத்தை பற்றிய பயம் இருந்தால் அதை தூக்கி எறிந்துவிடு..உன்னோடு நான் இருக்கிறேன்
- தூங்காத இரவுகள் இருக்கலாம்..! ஆனால் விடியாத இரவுமில்லை.. முடியாத செயலுமில்லை வெற்றி நிச்சயம்..!
- எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு.. அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. நான் இருக்கிறேன்..
- நிராகரிப்புகளைக் கண்டு நெஞ்சு உடையாதே.. உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால் இறைவன் உன்னை மேலே தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.
- நம்பிக்கையோடு நீ உன் கடமையை செய். உனக்கான அந்த நல்ல நாள் நிச்சயமாக உன்னை தேடி வரும்.
- எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு.. அனைத்தும் நன்மைக்கே என்பதை தீர்க்கமாக நம்பு. நான் இருக்கிறேன்..
- பொறுமையோடு இரு உன் உழைப்பு என்றும் வீணாகாது.. வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.
- துணிந்து நில். உனக்கு துணையாக நானிருக்கிறேன்.
- ஓடுவதாக இருந்தால் துரத்திக்கொண்டு ஓடுங்கள் வாழ்க்கை வாழ்வதற்கே, நிற்பதாக இருந்தால் எதிர்த்து நில்லுங்கள்
- உனக்கென படைக்கப்பட்ட அனைத்தும் நிச்சயமாக உன்னை வந்தடையும்…
- உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால், உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப்படுத்தகூடாது..
- நம் வார்த்தையால் ஒருவர் மனம் நிம்மதி அடைகிறது என்றால் அதுவும் தர்மம் தான்..!!!