பாலைவனத்தில் மழையா? 50 ஆண்டுகளின் பின்னர் கடும் மழை வெள்ளத்தில் மூழ்கிய சஹாரா!
சகாரா பாலைவனம் உலகின் வறண்ட மற்றும் வெப்பமான பகுதிகளில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படுகின்றது.
சராசரி வெப்பநிலை சில நேரங்களில் 30 °C (86 °F) மற்றும் கோடையில் சராசரியாக அதிக வெப்பநிலை 40 °C (104 °F)இது 47 °C (117 °F) வரை கூட உயரும் வாய்ப்பு இருக்கும்.
கொஞ்ச நாள் மழை பெய்யாவிட்டாலே, நாம் வசிக்கும் பகுதி பாலைவனம் ஆகிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழும்.
எப்போதும் மணலால் நிரம்பிக்கிடக்கும் பாலைவனத்தில் மழை பெய்யுமா என்ற சந்தேகம் பெரும்பாலானவர்களுக்கு காணப்படுகின்றது.
பாலைவனத்தில் எப்போதுமே அதிக அளவில் வெப்பம் நிலவும். இருந்தாலும் பாலைவனப் பகுதிகளிலும்கூட, எப்போதாவது மழை பெய்யும்.
உலகிலேயே மிகப் பெரிய பாலைவனமான சஹாராவில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யும். ஆனால் சஹாராவில் தற்போது கனமழை பெய்து ஆறு, குளங்கள் உருவாகியிருக்கின்றமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிகப்பெரிய பரப்பளவு கொண்ட சஹாரா பாலைவனம் 10 வெவ்வேறு நாடுகளை உள்ளடக்கியது.
குறிப்பாக அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மாலி, மொரிட்டானியா, நைஜர், மேற்கு சகாரா, சூடான் மற்றும் துனிசியா ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டது.
சஹாரா பாலைவனதத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகளின் பின்னர் தற்போது வரலாறு காணாத மழையால் வெள்ளம் பெருக்கெடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வெள்ளத்தால், பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு மத்தியில் தண்ணீர் தேங்கி நிற்கும் காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் மக்கள் அத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |