பிரபல சீரியல் நடிகைக்கு ரகசிய திருமணம்: ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்
சின்னத்திரை நடிகை சஹானா ரகசியம் திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது ஹனிமூன் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
“அரூபம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சஹானா. அதைத் தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். பின்பு பகல்நிலவு என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான “அழகு” என்ற தொடரில் ரேவதியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோவிட் காரணமாக அழகு சீரியல் நிறுத்தப்பட்ட நிலையில், ”கண்ணான கண்ணே” என்ற தொடரில் “அபர்ணா” என்ற கதாபாத்திலும், தாலாட்டு சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சஹானாவுக்கு திருமணமாகிவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. சஹானாவின் தாய் “சஹானாவிற்கும் டாக்டர் அபிஷேக்”கும் திருமணம் நடந்து விட்டதாக கூறியுள்ளனர்.
ஆடிமாதம் பிறப்பதற்கு முன்பு திருமணம் செய்ய வேண்டி இருந்ததால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெற்ற இவர்களின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்ற நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி பிரம்மாண்டமாக வரவேற்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவனுடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் சஹானா.