சபரிமலைக்கு நெய் தேங்காய் கொண்டு செல்வது ஏன் தெரியுமா?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நெய் ஊற்றி நெய் தேங்காயை தான் அபிஷேகத்துக்கு வழங்குவார்கள்.
சிவன், விஷ்ணு இருவரின் சக்தியாக அவதரித்தவர் ஐயப்பன் என்பதால் நெய் தேங்காய் அபிஷேகம் நடக்கிறது.
ஏன் இந்த வழக்கம்?
பந்தள மன்னனின் மனைவி கடும் வயிற்று வலியால் துடிதுடிப்பதாக பொய்யுரைத்ததுடன், அரசவை வைத்தியரின் மூலம் புலிப்பால் குடித்தால் மட்டுமே வலி குணமாகும் என சொல்ல வைத்தாள்.
தாய்க்காக புலிப்பால் கொண்டுவர காட்டுக்கு விரைந்தார் ஐயப்பன், அப்போது பந்தள மன்னன் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக நெய்யால் செய்யப்பட்ட பண்டங்களை கொடுத்து அனுப்பினார், மற்றும் தேங்காயையும் கொடுத்து அனுப்பினார், இதனை இருமுடியாக கட்டிக்கொண்டு காட்டுக்கு புறப்பட்டார் ஐயப்பன்.
அன்றிலிருந்து இருமுடி கட்டிக்கொள்ளும் வழக்கம் உண்டானது, மேலும் தன் அவதாரம் நிறைவேறியதால் மனித வாழ்வை துறந்து சபரிமலையில் ஐக்கியமானார்.
மகனை பார்க்க ஆண்டுக்கு ஒருமுறை செல்லும் பந்தள மன்னன், நெய்யால் ஆன பண்டங்களை எடுத்துச் செல்வார்.
இந்த வழக்கத்தின் காரணமாகவே இருமுடியுடன் நெய் தேங்காய் அபிஷேகமும் நிலைத்துப்போனது.