காரசாரமாக மோதிக்கொள்ளும் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்... பரபரப்பில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் ரீல் ஜோடியாக நடித்து ரியல் ஜோடி ஆனவர்கள் ஏராளம். அந்த வரிசையில் நடிகர் அசோக் செல்வனும், நடிகர் அருண் பாண்டியனின் மகளுமான கீர்த்தி பாண்டியனும் இணைந்தனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி திருநெல்வேலியில் பிரம்மாண்டமான முறையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டமை அனைவரும் அறிந்ததே.
இவர்கள் இருவரும் ப்ளூ ஸ்டார் என்கிற திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. அதற்கு முன்னரே இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்
திருமணத்துக்கு பின்னர் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார்கள். அதன்படி அசோக் செல்வன் நடிப்பில் தற்போது சபா நாயகன் திரைப்படம் தயாராகி உள்ளது.
சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் கண்ணகி படமும் ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. இப்படத்தை யஷ்வந்த் கிஷோர் இயக்கி உள்ளார். கதாநாயகியை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் கீர்த்தி பாண்டியன் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்திருக்கிறார்.
இதில் திருப்பம் என்னவென்றால் கண்ணகி படமும் வருகிற டிசம்பர் 15ஆம் திகதி தான் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகி மூன்றே மாதத்தில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் ஜோடி பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொள்ள உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பான விடயமாக பேசப்பட்டு வருகின்றது. குறித்த விடயம் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |