அப்பாவின் பிறந்தநாளுக்கு வராத தளபதி விஜய்! தீயாய் பரவும் புகைப்படம்
தளபதி விஜயின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மனைவி ஷோபா சந்திரசேகர் உடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
கடந்த ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ஜூலை 2ம் தேதி அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தனது 81வது பிறந்தநாளை இன்று கொண்டாடி உள்ளார்.
விஜய் ரசிகர்கள் பலரும் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது தனது மனைவி ஷோபா சந்திரசேகருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜயின் அம்மா கொடுத்த பரிசு
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கு பரிசாக சினிமா தீமில் இயக்குநர் சேர், கிளாப் போர்ட், அவர் இயக்கிய படங்களின் பெயர்கள் அடங்கிய கேக்கை மனைவி ஷோபா சந்திரசேகர் கொடுத்து அசத்தியுள்ளார்.
இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
ஏன் விஜய் வரவில்லை
அப்பா எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் மகன் விஜய்க்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில், தந்தையின் பிறந்தநாளில் விஜய் கலந்து கொள்ளவில்லை என தெரிகிறது. கேக் கட்டிங் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் 'வாரிசு' விஜய் இல்லை. தனது தந்தைக்கு வாழ்த்தாவது சொன்னாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.