தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கும் மாதம்தோறும் ரூ.1000
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதேபோல், சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சியை கைப்பற்றியது.
இன்று குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட சில தகவல் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளர்களின் வயது 21 நிறைவடைந்திருக்க வேண்டும்.
இவர்களுடைய ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிக்கு 1000 உரிமைத் தொகை வழங்கப்படாது.
பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது.
எந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டை உள்ளதோ அந்த கடைகளில் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என்று பெயர் சூட்டப்பட்டள்ளது குறிப்பிடத்தக்கது.