ரோட்டு கடை பாணியில் அசத்தல் சிக்கன் பொரியல்... வீட்டிலேயே எப்படி செய்வது?
பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் சிக்கன் முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது.
என்னத்ததான் சிக்கனை வீட்டில் மணக்க மணக்க குழம்பு வைத்து சாப்பிட்டாலும் ரோட்டு கடைகளில் கிடைக்கும் சிக்கன் பொரியலுக்கு என்றும் மவுசு குறைவதே இல்லை.
அப்படி ரோட்டு கடை பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் பொரியலை வெறும் பத்தே நிமிடத்தில் வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டியது)
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
சில்லி ப்ளக்ஸ் - 1 மேசைக்கரண்டி
கடலை மாவு - 1 மேசைக்கரண்டி
சோள மாவு - 1மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிக்கனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தேவையானளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகுத் தூள், சில்லி ப்ளேக்ஸ், கடலை மாவு, சோள மாவு, எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து ஊறவிட வேண்டும். நீர் சேர்க்க கூடாது.
சிக்கனை எவ்வளவு நேரம் ஊற வைக்கிறோமோ, அந்த அளவில் சிக்கனில் மசாலா நன்கு ஊறி, நல்ல சுவையை கொடுக்கும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் அருமையான சுவையில் சுகாதாரமான முறையில் ரோட்டுக்கடை சிக்கன் பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |