48 நாளுக்குள் நினைத்தது நடக்க வேண்டுமா? கல் உப்பு பரிகாரம்
நீங்கள் கேட்டதை கொடுக்க கல் உப்பு பரிகாரம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..
கல் உப்பை, உள்ளங்கையில் வைத்துக்கொண்டு உண்மையாக பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, அவை நம்மை சுற்றி பரவ ஆரம்பிக்கும். இதுபோல, கல் உப்பை கொண்டு பல ஆன்மீக காரியங்கள் செய்யப்படுது.
உங்களுக்கு தெரியுமா.. உப்பு என்பது மகாலட்சுமி தேவியின் அம்சமாகும். அதுமட்டுமின்றி, விஷ்ணு பகவான் வீற்றிருக்கும் இடம் கடல். இங்கிருந்து தான் உப்பு எடுக்கப்படுகிறது.
அதுபோலவே, உப்பையும் மிளகையும் ஒன்றாக வைத்து கோவில் பலிபீடத்தில் போட்டு வழிபடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொதுவாகவே, அம்மன் கோவில்களில் இப்படி செய்வது சகஜமா இருக்கும்.
அப்படி வழிப்படுவதற்கு காரணம், எதிரிகள் ஒழிந்து போவார்கள் என்பது மக்களின் நம்பிக்கை. வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளை விரட்ட இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் செய்யலாம்.
கேட்டதை கொடுக்க கல் உப்பு பரிகாரம்: ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல்லுப்பை நிரப்பி அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை நடுவில் வைக்க வேண்டும். பிறகு நான்கு காய்ந்த மிளகாயை எடுத்து அதை சுற்றி நான்கு மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைக்க வேண்டும்.
மிளகாயின் கூர்மையான பகுதி எதிர்மறை சக்திகளை எடுத்துக் கொள்ளும் தன்மையுடையது. குறிப்பாக, இந்த பொருட்களை நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றும்போது அவை அனைத்தையும் ஓடும் நேரில் விட்டுவிடுங்கள்.
கல் உப்பு தீபம்: ஆற்றலை நாம் வீட்டில் இருந்து வெளியேற்றுவதற்கு இந்த தீபம் சக்தி வாய்ந்தது. மேலும் வீட்டில் இந்த தீபம் ஏற்றினால், வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறையும் என்பது நம்பிக்கை.
முக்கியமாக, பௌர்ணமி நாட்களில் உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடை, பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் என இதுபோன்ற தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
குறிப்பாக, நீங்கள் நினைத்த வேலை நினைத்த படியே கிடைக்கும். குறிப்பாக, இந்த தீபம் ஏற்றி வழிபாடு செய்வதால், 48 நாட்களுக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. நீங்கள் தீபம் ஏற்றும் போது, விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.