மறைந்த நடிகர் ரோபோ ஷங்கருக்கு விஜய் டிவி செய்த விடயம்.. கண்கலங்கி நின்ற கலைஞர்கள்
இறப்பதற்கு முன்னர் நடிகர் ரோபோ ஷங்கர் கலந்து கொண்ட அது இது எது நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜய் தொலைக்காட்சி ஒரு காணொளியொன்றை பகிர்ந்து சின்னத்திரை கலைஞர்களை கண்கலங்க வைத்துள்ளது.
நடிகர் ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் ரோபோ சங்கர்.
இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
அதன் பின்னர், சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு அங்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்த காரணத்தினால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலன் கொடுக்காமல் ரோபோ சங்கர் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் வீடு தேடி வந்து தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர்.
ரோபோ சங்கருக்கு அஞ்சலி
இந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி, அதன்பின்னர் வெள்ளத்திரையில் பிரபலமான நடிகருக்கு விஜய் தொலைக்காட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.
மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கும் அது இது எது நிகழ்ச்சி கடைசியாக ரோபோ சங்கர் கலந்து கொண்ட எபிசோட் காணொளிகள் ஒளிபரப்பபட்டது. அந்த மேடையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் கலைஞர்கள் கூடி நின்று அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அதன் பின்னர், ரோபோ சங்கர் குரலில் கலைஞர்கள் பேசி தங்களுக்குள் இருக்கும் கவலையை மாறி மாறி பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த காணொளியை பார்த்த பலரும் கலைஞர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தி ரசிகர்கள் பலரின் நெஞ்சங்களில் சரிச் செய்ய முடியாத கவலையாக இருந்து வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
