வெள்ளத்தில் சிக்கிய ரோபோ சங்கர்... காயத்துடன் அவரே வெளியிட்ட காணொளி
நடிகர் ரோபோ சங்கர் வெள்ளத்தில் சிக்கி காலில் காயத்துடன் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகர் ரோபோ சங்கர்
சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளக்காடாகவும் மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவையைக் கூட சமாளிக்க முடியாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
இதில் சினிமா பிரபலங்களும் தவித்து வரும் நிலையில், ரோபோ சங்கர் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைக்கு சென்று வெள்ளத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.
ஆம் அவரது வீட்டின் முன்பு தண்ணீர் முழங்கால் அளவிற்கு நிற்கும் நிலையில், பொருட்கள் வாங்கி வரும் நிலையில், எதிர் வீட்டில் இருந்த தகரம் காற்றில் அடித்து தண்ணீரில் வீழ்ந்துள்ளது.
மேலும் அவரது காலில் காயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் மற்றவர்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது என்ற எண்ணத்தில் அதனை தண்ணீரில் மிதந்து மிதந்து தனது வீட்டின் வாசலில் கொண்டு சேர்த்துள்ளார்.
அனைவரும் மளிகை ஜாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதுடன், பால் வாங்க முடியவில்லை... கடும் தட்டுப்பாடு இருப்பதாக காணொளியில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |