பிரஸ் மீட்டில் RJ பாலாஜி செய்த தரமான சம்பவம்!
பத்திரிகையாளர்கள் கூடியிருந்த பிரஸ் மீட்டில் அவர்களின் கேள்விகளுக்கு சராமாறியாக பதிலளித்து RJ பாலாஜி தெறிக்கவிட்டுள்ளார்.
நடிகர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “ரன் பேபி ரன்” என்ற திரைப்பட ட்ரைலர் சமிப தினங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிகையாளரை கலாய்த்த பிரபலம்
இந்த நிலையில், “ரன் பேபி ரன்” திரைப்படத்திற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பொன்று அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் ஜியன் கிருஷ்ணகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.
இதன்போது மேடையேறிய கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வியோன்றை கேட்டுள்ளார். இதற்கு சரியான பதிலளிக்காமல் சபையோரை மலுப்பும் வகையில் பதிலளித்துள்ளார்.
உதாரணமாக, கடந்த வருடம் டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிட மக்கள் வசித்து வரும் வேங்கை வயல் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் டேங்கில் மனித கழிவுகளை சில அந்நியர்கள் வீசி சென்றுள்ளனர். இதனால் முழு இந்தியாவும் கொந்தளித்தது இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அதற்கு பாலாஜி, எனக்கு தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் மிகவும் பிடிக்கும். மற்றும் கிரிக்கட் போட்டியில் இரண்டு வீரர்கள் 200 ரன்களை எடுத்தது பற்றியும் கூறியிருந்தார்.
குழப்பமடைந்த பத்திரிக்கையாளர்கள் என்ன கேள்விக்கு பதில் புரியாமல் அளிக்கிறீர்கள் என கூச்சலிட்டுள்ளாரகள். இதனால் கடுப்பான பாலாஜி, நான் எனது படத்தை பற்றி பேசுவதற்கு மாத்திரம் உங்களை வரவழைத்தோம்.
இது தொடர்பாக பேசுவதற்கான மேடை இதுவல்ல என கூறியதோடு, உங்களிடம் கொஞ்சம் நேரம் விளையாடினேன் எனவும் கூறியுள்ளார்.
[