பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் பெற்றோரை பார்த்ததுண்டா?
பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி மற்றும் பிள்ளைகளின் படங்களை அடிக்கடி ஊடகங்களில் பார்த்திருக்கலாம்.
ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி பெயரோ அடிக்கடி ஊடகங்களில் அடிபடும். மகாராணியாரை விட அவருக்கு சொத்து அதிகம், அவர் பிரித்தானியாவில் வரி செலுத்தவில்லை என்றெல்லாம் அவரைக் குறித்து பல செய்திகள் வெளியாகுவதுண்டு.
சொல்லப்போனால், அக்ஷதா மூர்த்தியின் தந்தையும் இன்ஃபோசிஸ் நிறுவனருமான நாராயண மூர்த்தியையோ பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்.
ஆனால், ரிஷியின் பெற்றோரைக் குறித்து அந்த அளவுக்கு மக்கள் அறிந்திருப்பார்களா தெரியாது. ரிஷியின் தந்தையாகிய Yashvir, கென்யாவில் பிறந்தவர், அவர் ஒரு மருத்துவர். தாய் உஷா, தான்சானியாவில் பிறந்தவர், அவர் ஒரு மருந்தாளுநர் ஆவார்.
image - thetimes
ரிஷியின் தாத்தா பாட்டிகள் இந்தியாவிலுள்ள பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.
தற்போது, ரிஷியின் பெற்றோர் மற்றும் இதுவரை வெளிவராத ரிஷியின் இளம்பருவ புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன.
image - mastkhabar