பீர் குடித்தாலும் தொப்பை அதிகரிக்காமல் இருக்கனுமா? இதை மட்டும் செய்தால் போதும்
பீர் குடிப்பதால் தொப்பை அதிகரிக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்
இன்று இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் பீர் என்றால் அதில் அதிக தாகம் இருக்கின்றது. பீர் குடிப்பதால் வயிறு உப்புசம் ஆகி தொப்பை அதிகரிக்கின்றது.
இவ்வாறு தொப்பை அதிகரிக்காமல் இருப்பதற்கு தவறாமல் செய்ய வேண்டிய விடயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
தொப்பையை அதிகரிக்கும் பீர்
பீர் பானமான பார்லி கஞ்சி, ஆல்கஹால் போன்றவற்றால் உற்பத்தி செய்யப்படும் நிலையில், இவை ஆரோக்கியத்திற்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. வயிறு உப்புசம் ஏற்பட்டு தொப்பை அதிகரிக்கவும், உடல் பருமன் அதிகரிக்கவும் செய்வதுடன், நீரிழிவு, இதய நோய்களுக்கு வழிவகுக்கின்றது.
இதனால் ஆரோக்கியத்தில் மேலும் பல பிரச்சனைகள் ஏற்படுவதுடன் இந்த பீர் தொப்பைக்கு என்ன தீர்வு என்பதை தெரிந்து கொள்வோம்.
பீர் தொப்பை
பீர் தொப்பை என்பது தொப்பையைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு படிவதையும், இடுப்பு சுற்றளவை அதிகரிகக்கவும் செய்கின்றது.
பீர் அருந்துவதால் தான் இந்த பீர் தொப்பை ஏற்படுகின்றது. அதிக கொழுப்புள்ள அல்லது வறுத்த உணவுகள், ஜங்க் உணவுகள், காற்றோட்டமான பானங்கள் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவை வயிற்றில் கொழுப்பு படிவதற்கு காரணமாக இருக்கின்றது.
தொப்பையை குறைப்பதற்கான வழிகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும். இதனை செய்தால் தொப்பை ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பீர் தொப்பையைக் குறைப்பதற்கு, புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு, குறைந்த சர்க்கரை மற்றும் நார்ச்சத்து உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
உடல் உழைப்பு அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும், கொழுப்பை படிப்படியாக கரைக்கவும் உதவுகின்றது. அடிவயிற்று க்ரஞ்சஸ் போன்ற உடற்பயிற்சிகள் இதற்கு பெரிதும் உதவுகின்றது. மேலும் ஏரோபிக் உடற்பயிற்சி, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
சர்க்கரை, உப்பு இவற்றினை தவிர்ப்பதுடன், வறுத்த உணவுகளை விட வேகவைத்த அல்லது சுட்ட உணவுகள் போன்றவற்றை தேர்வு செய்யலாம். எலுமிச்சை அல்லது தேங்காய் நீர் போன்ற ஆரோக்கியமான பானங்களையும் பருகலாம்.
மூலிகை கலவைகள், பச்சை நிற ஸ்மூர்த்திக்கள் போன்றவற்றினை எடுத்துக்கொண்டால் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடம்பிலிருந்து நச்சுக்கள், கழிவுப் பொருட்களை திறம்பட வெளியேற்றி கல்லீரல் புத்துணர்ச்சிக்கு உதவுகின்றது.
தரமான தூக்கம் கட்டாயம் தேவையாகும். தூக்கம் இல்லையெனில் மன அழுத்தத்தை ஏற்படுத்தி, ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் கொழுப்பு சேர்வது அதிகரிக்கிறது. எனவே தரமான தூக்கத்தை தூங்குவதில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |