வீட்டில் பழைய சோறு இருக்கா? வீசாதீங்க இப்படி யூஸ் பண்ணுணா மல்லிகை செடி பூத்து குலுங்கும்
வீட்டில் பழைய சோறு இருந்தால் அதை வீசாமல் மல்லிகை செடிக்கு குறிப்பிட்ட முறையில் பயன்படுத்தும் போது செடியில் நிறைய பூ பூக்கும்.
பழைய சோறு
பொதுவாக மல்லிகை பூ செடிகளை பூக்க வைக்க கொஞ்சம் முடியாத காரியமாக இருக்கும். இதற்கு பல விலையுயர்ந்த இரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
இதற்கு வீட்டில் இருக்கும் பழைய சோறு போதும். மல்லிகைச் செடிக்கு உரம் போடும்போது, அது நேரடி சூரிய ஒளியில் இருக்க வேண்டும். மல்லிகை செடியின் நுனிகளை வெட்டி விட வேண்டும்.
அப்போது தான் செடி தழைத்து வளர ஆரம்பிக்கும். மல்லிகைப் பூச்செடி அதிகமான பூக்களை பூப்பதற்கு இயற்கை திரவ உரம் மிகவும் அவசியம்.
நுனிகளை வெட்டி விட்டு ஒரு வாரத்தில் தான் உரம் போட வேண்டும். முதலில் செடியைச் சுற்றியுள்ள களைகளை எல்லாம் நீக்கிவிட்டு, மண்ணை லேசாகக் கிளறி விட வேண்டும்.
இதன்பின்னர் ஆட்டு எரு போன்ற இயற்கை உரங்களை போட வேண்டும். இதன் பின்னர் வீட்டில் இருக்கும் பழைய சோற்றை ஊற வைத்து அந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.
இந்த தண்ணீரை ஊற்றி ஒரு வாரத்தின் பார்த்தால் செடியில் புதிய துளிர்கள் விட ஆரம்பித்து மொட்டுக்கள் வந்திருப்பதை காணலாம்.
இந்த உர தண்ணீரை செடிக்கு ஊற்றி காய வைத்து பின்னர் ஊற்றி விட வேண்டும். இப்படி செய்தால் மல்லிகை செடி பூத்து குலுங்கம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |