எந்த வகையான அரிசியை சாப்பிடலாம்? நிபுணரின் விளக்கம் இதோ
இன்று உலகில் அதிகமான நபர்கள் உணவிற்காக அதிகம் எடுத்துக்கொள்ளும் தானியம் அரிசி தான். ஊட்டச்சத்து நிறைந்த அரிசியில் பல ரகங்கள் உள்ளது.
ஒவ்வொரு அரிசியிலும் ஒவ்வொரு தனிதனியான குணங்கள் இருப்பதை விளக்கியுள்ளார் ஊட்டச்சத்து நிபுணர்.
அரிசியின் வகைகளும் ஆரோக்கியமும்
இன்று உலம் முழுவதும் வெள்ளை நிற அரிசியையே சாப்பாட்டுக்கு அதிகம் பயன்படுத்துகின்றனர். மாவுச்சத்து அதிகமாக இருக்கும் இந்த அரிசியை, குறைந்த கலோரி கொண்ட உணவை உண்ண வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை எடுத்து கொள்ளாமல் இருக்கலாம்.
இதே போன்று ப்ரவுன் நிற அரிசியில், பாலிஸ் செய்யப்பட்டது போன்று இருக்காதாம். இதில் வைட்டமின்கள் பி6, மெக்னீசியம், செலீனியம், தியமைன் மற்றும் நியசின் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளது. இந்த அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
மண்வாசனை நிரம்பி இருக்கும் கருப்பு நிற அரிசியில், வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுவதுடன், நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றது.