நடிகை ரேவதியின் விவாகரத்துக்கு இதுதான் முக்கிய காரணமாம்?- வெளியான தகவல் ; ஷாக்கான ரசிகர்கள்
நடிகை ரேவதி விவாகரத்துக்கு இதுதான் காரணம் குறித்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை கொடுத்துள்ளது.
நடிகை ரேவதி
80களில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. குடும்பப்பாங்கான கதாபாத்தில் ஏற்று நடித்ததால் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும், வரவேற்பையும் பெற்றார்.
தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் ‘மண் வாசனை’ படத்தின் மூலம் அறிமுகமானார். ரஜினி, கமல், பிரபு, மோகன், அர்ஜூன் உட்பட பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக மின்னினார்.
விவாகரத்துக்கு காரணம்?
நடிகை ரேவதி, நடிகரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்தார். இவர்களை நட்சத்திர ஜோடிகள் என்று மக்கள் வர்ணித்தனர்.
ஆனால், பல ஆண்டு காலமாக இத்தம்பதிக்கு குழந்தை இல்லாமல் தவித்தனர். இதனால், இருவருக்குள்ளும் பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றனர்.
விவாகரத்து பெற்று தனிமையில் வாழ்ந்து வந்த ரேவதி 47 வயதைக் கடந்தாலும், டெஸ்ட் டியூப் மூலமாக குழந்தையை பெற்றெடுத்தார். எதைக்காரணம் காட்டி தன்னை ஒதுக்கிய சமுதாயத்திற்கு மத்தியில் நான் தாய்மை அடைந்து பெருமைபெற்றார். அந்தக் குழந்தைதான் உலகம் என்று வாழ்ந்து வரும் ரேவதி, சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |