சிக்கன் கிரேவியில் செத்து கிடந்த எலி... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
உணவகம் ஒன்றில் சமைக்கப்பட்ட சிக்கன் கிரேவியில் எலி ஒன்று இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கன் கிரேவியில் எலி
பஞ்சாபின் லூதியானாவில் உள்ள பிரபல உணவகமான பிரகாஷ் தாபாவில் குடும்பத்தின் ஒருவர் சாப்பிட வந்துள்ளனர். இவர்களுக்கு சிக்கன் கிரேவி பரிமாறப்பட்ட நிலையில், அதில் எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இந்த காணொளி டுவிட்டரில் வைரலானதையடுத்து, உணவகத்தின் மீது சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளானர்.
ஆனால் உணவகத்தின் உரிமையாளரோ அவ்வாறு எந்தவொரு தவறும் நடக்கவில்லை என்றும், தனது உணவகத்திற்கு கெட்ட பெயர் வரவழைப்பதற்கு இவ்வாறு நடந்துகொள்வதாக கூறியுள்ளார்.
தற்போது உணவருந்திய நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்தின் உரிமையையும் ரத்த செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |