இணையத்தில் வைரலாகி வரும் இந்த தகவலை படித்து விட்டீர்களா? ஆச்சர்யமான உண்மை
ஹோட்டல் ஒன்றிற்கு சென்று உணவு உட்கொள்வது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஆடம்பர செலவாக மாற்றமடைந்துள்ளது என்றால் மிகைப்படாது.
எனினும் கடந்த காலங்களில் மிகவும் நியாயமான விலையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் ரெஸ்டூரன்ட் ஒன்றில் பில் ஒன்று அதிகளவில் வைரலாகி வருகின்றது.
1985ம் ஆண்டில் வழங்கப்பட்ட பில் ஒன்றே இவ்வாறு வைரலாகி வருகின்றது.
குறைந்த விலையைக் கொண்ட தரமான ஹோட்டல் ஒன்றை தேடிக் காண்பது சற்றே சவாலாக விடயமாகத்தான் காணப்படுகின்றது.
பெருந்தொகை விலைக்கு குறைந்தளவு உணவு வழங்கப்படுவதாக மக்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
எனினும் நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக ஹோட்டல் ஒன்றில் உணவு வகைகளுக்கு வழங்கப்பட்ட பில் ஒன்று தற்பொழுது இணையத்தில் உலவி வருகின்றது.
1985ம் அண்டில் ஷாய் பன்னீர் எனப்படும் உணவுப் பண்டம் வெறும் 8 ரூபா என்பதுடன் டால் மக்கானி பெறும் 10 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உணவகமொன்றினால் இந்த பில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி இந்த பில் முதன் முதலாக முகநூலில் பதிவிடப்பட்டுள்ளது.
எனினும் தற்பொழுது மீண்டும் இந்த பில் பெரும் எண்ணிக்கையிலானவர்களினால் பகிரப்பட்டு வருகின்றது.
டெல்லியின் லாஜ்பாட் நகரில் அமைந்துள்ள Lazeez Restaurant & Hotel என்னும் உணவகத்தில் இவ்வாறு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஷாய் பன்னீர், டால் மக்கானி, ராய்டா மற்றும் சப்பாத்தி ஆகிய உணவு வகைளுக்கும் 24 ரூபா 30 சதம் மட்டுமேயாகும்.
ஷாய் பன்னீர் வட இந்தியர்களினால் விரும்பு உண்ணும் பன்னீர் கறி வகையொன்றாகும், அதேபோன்று டால் மக்கானி என்பது பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவு விரும்பி உண்ணும் ஓர் கறி வகையாகும், சப்பாத்தி போன்றனவற்றுடன் இந்தக் கறி பரிமாறப்படும், ரய்டா என்பது பச்சடி வகையை குறிக்கும்.
இந்த காலம் மீண்டும் வராத, அது ஓர் அழகிய காலம் எனவும் பல்வேறு வழிகளில் நெட்டிசன்கள் இந்த பில் தொடர்பில் தங்களது எண்ண வெளிப்பாட்டை கமன்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.