ஒரே ஒரு எலுமிச்சை போதும்! அடுத்தடுத்து வெற்றிகள் குவியும்- இப்படி பரிகாரம் செய்திடுங்க
நாம் எல்லோரும் பொதுவாக வீட்டைத் தாண்டி அதிக நேரம் வேலை செய்வது அலுவலகத்தில் தான். அந்த அலுவலகத்தில் இருக்கும் பல பிரச்சினைகளும் பல தடைகளும் வந்துக் கொண்டே தான் இருக்கும்.
அப்படி பல பிரச்சினைகளை சந்திப்பவர்களுக்கு எளிய முறையில் எலுமிச்சையை வைத்து சிறந்த பரிகாரங்களை செய்தால் நிம்மதியாக உங்கள் வேலைகளை தடையின்றி தொடரலாம்.
பரிகாரங்கள்
எலுமிச்சையானது ஆரோக்கியத்திற்கு மட்டும் சிறந்ததது அல்ல அது ஆன்மீகத்திற்கும் சிறந்தது தான் இந்த எலுமிச்சையை வைத்து உங்களுக்கு சிறந்த பலன்கள் கொடுக்கும் பரிகாரங்கள் இதோ,
1. என்னதான் கடினமாக உழைத்தாலும் தொழிலில் வெற்றிப் பெறமுடியவில்லை என்றால் எலுமிச்சை பழத்தில் 4 கிராம்புகளை வைத்து ஹனுமான் கோவிலுக்கு சென்று படைத்து ஹனுமான் சாலிஷாவை ஓதினால் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும்.
2. உங்களுக்கு அதிகம் கண்திருஷ்டி இருப்பதை நீங்கள் அறிந்துக் கொண்டால் ஒரு எலுமிச்சை பழத்தை தலை முதல் கால் வரைக்கும் 7 முறை திருப்பி அந்த எலுமிச்சையை 4 துண்டுகளாக வெட்டி ஒதுக்குப்புறத்தில் வீசி விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும்.
3. வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை 5 எலுமிச்சை பழங்களை வெட்டி நீங்கள் வேலை செய்யும் இடத்தில் கொஞ்சமாக கருப்பு மிளகு கைப்பிடி மஞ்சள் கடுகு சேர்த்து வைக்கவும். பின் அடுத்த நாள் பொருட்களை எல்லாம் எடுத்து ஒரு தனியான இடத்தில் வைத்து விட வேண்டும்.
4. எடுத்த காரியங்களில் வெற்றிப் பெற வேண்டும் என்றால் ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்து குறுக்கு வழியில் சென்று ஏழு முறை தன்னைத்தானே சுற்றி இரண்டாகப் நறுக்கி ஒரு பகுதியை முன்னும் பின்னும் எறிய வேண்டும்.
5.எவ்வளவு தான் உழைத்தாலும் வேலையில் வெற்றி கிடைக்க எலுமிச்சை பழத்தை நள்ளிரவில் நான்காக வெட்டி குறுக்கு வழியில் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும்.
6. நீங்கள் செய்யும் வேலை அடுத்தடுத்து தோல்வியை மட்டும் சந்தித்தால் எலுமிச்சை பழத்தை எடுத்து உங்கள் தலையில் ஏழு முறை ஆட்டி, அதை இரண்டாகப் பிரித்து இடது கை துண்டை வலப்பக்கமும், வலது கை துண்டை இடப்புறமும் எறிந்து விட வேண்டும்.