திருமணத்திற்கு பின் இந்த விடயம் தெரியாமல் சமாளிக்க முடியாது.. பலரும் அறியாத சீக்ரெட்
புதிதாக திருமணமான தம்பதிகள் வாழ்க்கையை சிறந்த முறையில் நடத்துவதற்கு சில இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அந்த வகையில் காதல், தோழமை, இரு தம்பதிகளுக்கு இடையே பகிரப்பட்ட கனவுகள், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை உள்ளிட்ட விடயங்கள் உள்ளடங்குகின்றன.
திருமணத்திற்கு பின்னர் குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றால் மேற்குறிப்பிட்ட பண்புகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆனால் தம்பதிகள் இவற்றை தாண்டி முக்கியமான பண்பொன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் காணலாம்.
தம்பதிகள் தெரிந்து கொள்ள வேண்டியது?
காதலிப்பவர்களாக இருந்தாலும் சரி, திருமணம் செய்து கொண்டவர்களாக இருந்தாலும் சரி ஒரு உறவில் இருப்பவர்கள் தன்னுடைய துணைக்கு நேர்மையாக இருக்க வேண்டும்.
இது தவறும் பட்சத்தில் சிறந்த தொடர்பாடல் இருக்காது, வீட்டில் நிம்மதி இருக்காது, ஒழுங்கான பரஸ்பரம் இருக்காது இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன.
மேலும் திருமணம் முடிந்த பின்னர் கணவன் - மனைவி உறுதியாக இருந்தால் அந்த குடும்பத்தை யார் வந்தாலும் அசைக்க முடியாது.
எதிர்பார்ப்புகள், அச்சங்கள், கனவுகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை வளர்க்கும். இது திருமண பந்தத்தை வலுப்படுத்த உதவுகின்றது.
கணவன் - மனைவியாக இருந்து பெற்றோர்களாக மாறும் பொழுது அதற்கான பொறுப்புக்கள் அதிகமாகின்றன.
இதற்கு ஒரு அடிப்படை புரிதல் தேவை. நிதி அழுத்தம், தொழில் மாற்றங்கள் மற்றும் குடும்ப இயக்கவியல் போன்ற சவால்களை எதிர்நோக்க வேண்டும் என்றால் குடும்பத்திற்குள் ஒற்றுமை தேவை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |