றீ(ச்)ஷாவில் அமோக விளைச்சல் கொடுக்கும் அன்னாசி பழம்
றீ(ச்)ஷாவில் அன்னாசி பழம் அமோக விளைச்சல் கொடுப்பதாக காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கிளிநொச்சி(kilinochchi) - இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) காய்கறிகள் மற்றும் பழங்களின் விளைச்சல் அமோக பலனை கொடுத்து வருகின்றது.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பசளைகளை பயன்படுத்தி தான் இங்கு விளைச்சல் செய்யப்படுகின்றது.
அந்த வகையில், நேற்றைய தினம் வெளியான காணொளியில் அன்னாசி பழச்செய்கை குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த அன்னாசி பழச்செய்கை தற்போது நல்ல விளைச்சளை தரக்கூடிய நிலையில் காணப்படுவதுடன், அன்னாசி செய்கையை விரிவுப்படுத்த றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தயாராகி வருவதாகவும் குறித்த காணொளியில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் சுற்றுலாத் தலமாகவும் மாறி வருகின்றது.
அத்துடன், சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் பல்வேறு பயிர்ச்செய்கைகள் உட்பட சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |