தமிழரின் வரலாற்று நினைவுகளை பறைசாற்றும் றீ(ச்)ஷா!
கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள மிக அழகான ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
இந்தப் பண்ணையில் தமிழர்களின் நினைவுகளை பிரதிபலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த றீ(ச்)ஷா பண்ணை ரெஸ்டூரண்ட் போன்ற சில இடங்களில் தமிழுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது.
இலங்கையில் இப்படியொரு இடமா என்று வியப்பைப் ஏற்படுத்தும் வகையில் அமைதியான சூழல், சுத்தமான இயற்கைக் காற்று, சுற்றுலாப் பயணிகளுக்கும், தங்களது சுற்றுலாப்பயணத்தை வெறுப்பில்லாமல் கழிப்பதற்கும் ஏற்ற இடமாகவே அமைந்துள்ளது.
இலங்கை மாத்திரமல்ல வேறு எந்த நாட்டிலிருந்து வந்தாலும் உங்களுக்கு பிடித்தமான உணர்வைக்கொடுக்கும் தலமாகவே உள்ளது.
உணவிலிருந்து அனைத்து விடயங்களிலும் தங்களது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தான் இந்த றீ(ச்)ஷா பண்ணையை அமைத்துள்ளனர்.
குழந்தைகள் விளையாடுவதற்கென விளையாட்டு அரங்குகளையும் இங்கு காணலாம். இவைத்தவிர பல சுவாரஷ்யமான இடங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
றீ(ச்)ஷா பண்ணை தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது இக் காணொளி,
இதற்குள் ஒரு சிறிய இலங்கை இருக்கு
வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm House
இந்த Farm House-ல் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம்
இது இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்