இலங்கை றீ(ச்)ஷாவின் சுவையருவி உணவகம்! பாரம்பரிய முறையில் புட்டு கொத்து செய்வது எப்படி?
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் சுவையருவி எனும் புதிய சைவ உணவகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த உணவகமானது, தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனினால் கடந்தாண்டு திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சைவ உணவகம் றீ(ச்)ஷாவிற்கு வருகை தரும் அனைத்து மக்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நூற்றுகணக்கானோர் அமர்ந்திருந்து உணவு உண்ணுவதற்கான இடவசதியோடு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு அனைத்து விடயங்களிலும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்பதால் பார்த்து பார்த்து செய்கின்றனர்.
பாரம்பரிய முறையில் கிடைக்கும் இந்த சுவையருவி உணவகத்தில் புட்டு கொத்து எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் அவர்களே சமையல் செய்பவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.
குறிப்பாக காய் வெட்டுவதில் கூட சரியான முறையை பின்பற்ற வேண்டும். மேலும் உணவின் முறையை வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு கொடுப்பது என்பதையும் மிகவும் அருமையாக செய்து காட்டி அசத்தியுள்ளார். குறித்த காணொளி இதோ