நீரிழிவு ஆபத்தை தவிர்க்க வேண்டுமா? இதை மறக்காமல் செய்யுங்கள்
உலகில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் கருதப்படுகின்றது.
உலக சனத்தொகையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவை தவிர்த்துக் கொள்வது எவ்வாறு என்பது தொடர்பில் தென் அவுஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு ஒன்றினை நடத்தியுள்ளனர்.
இந்த ஆய்வின் மூலம் நன்றாக உறங்குபவர்களுக்கு டைப் 2 ரக நீரிழிவு ஏற்படும் சாத்தியங்களை வரையறுத்துக் கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய்க்கும் உறக்கமின்மைக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
தூக்கமின்மையால் அவதியுரும் நபர்கள் உடல் எடை அதிகரிப்பு கொலஸ்ட்ரால் அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் இந்த காரணிகள் டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும் எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் டைப் 2 ரக நீரிழிவு நோயினால் சுமார் ஒரு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் டைப் 2 ரக நீரிழிவு நோய் சுமார் 42 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Images: Healthline
உறக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிவோம் எனினும் பொதுவாக எத்தனை மணித்தியாலங்கள் உறங்குகிறோம் என்பது பற்றியே அதிக அளவு நாம் கவனம் செலுத்துகின்றோம் என தென் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் லீசா மெற்றிக்கனி (Dr Matricciani ) தெரிவித்துள்ளார்.
எத்தனை மணித்தியாலங்கள் உறங்குகின்றோம் என்பதிலும் எவ்வளவு நன்றாக உறங்குகின்றோம் வழமையாக எவ்வாறு உறக்கத்திற்கு செல்கின்றோம் போன்ற காரணிகள் மிகவும் முக்கியமானது, உறங்கும் நேரத்தைப் போன்றே இவையும் முக்கியமானவை என அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஆரோக்கியமாக வாழ்வதற்கு உறக்கம் மிகவும் அத்தியாவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.