சுகர் நோயாளிகளே இனி சிவப்பரிசி ரொட்டி சாப்பிடுங்க.... பத்தே நிமிடம் போதும்!
சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் மருந்து மாத்திரைகளை எடுத்து கொள்ளும் சக்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு.
இனி சிவப்பரிசி ரொட்டி செய்வது எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிவப்பரிசி - 250 கிராம்
- வெங்காயம் - ஒன்று
- பச்சை மிளகாய் - ஒன்று
- சீரகம் - ஒரு டீஸ்பூன்
- கேரட் - ஒன்று
- தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்
- கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை துருவிக்கொள்ளவும்.
சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022