Bigg Boss: சேதுபதிக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன்.. மாற்றத்திற்கு காரணம் என்ன?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதிக்கு பதிலாக ரம்யாகிருஷ்ணன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 10வது சீசன் சென்று கொண்டிருக்கும் நிலையில் சனி மற்றும் ஞாயிறு கிழமையில் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிவந்தார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக தொண்டை பிரச்சனை காரணமாக சரியாக பேச முடியாமலும் தவித்து வந்தார். ஆனால் அதனை பொறுத்துக்கொண்டு நிகழ்ச்சியினை தொகுத்து கொடுத்தார்.

இந்நிலையில் இன்று விஜய்சேதுபதி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக வராமல் அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் தொகுப்பாளராக வந்துள்ளார்.
இதற்கான காரணம் தெரியாமல் மக்கள் குழுப்பத்தில் ஆழ்ந்து வருகின்றனர். இதுகுறித்த காரணம் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ரம்யாகிருஷ்ணன் ஏன்?
கடந்த வாரம் விஜய் சேதுபதி பேசவே முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். ஆகவே அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ரம்யாகிருஷ்ணன் வந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
ஆனால் கடந்த நாட்களில் டிடிஎஃப் வாசன் முகேஷை அடித்து தள்ளியதால் ரெட் கார்டு கொடுப்பதற்கு ரம்யாகிருஷ்ணனை வரவழைத்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த நிகழ்ச்சியின் ரெட் கார்டு பிரச்சசையை விஜய்சேதுபதி முடிவெடுத்தார். ஆனால் தற்போது ரெட் கார்டு விஜய் சேதுபதி வந்தால் ரெட்கார்டு கொடுக்கமாட்டார் என்பதால் ரம்யாகிருஷ்ணனை வரவழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் கடந்த ஆண்டு ரெட் கொடுத்து வெளியே அனுப்பியவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்ததால் இறுதி நிகழ்ச்சியின் போது அவர்களையம் அழைத்து வந்தனர்.
தற்போது ரம்யாகிருஷ்ணன் தனது ஸ்டைலில் பேசி ப்ரொமோ காட்சியினை வெளியிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |