அட இது தெரியாம போச்சே..! கீரியும் பாம்பும் பரம எதிரிகளாக இருக்க இதுதான் காரணமா?
பொதுவாகவே நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவருக்கு நாம் எதிரியாகவும் நமக்கு அவர் எதிரியாகவும் மாறிவிடுவார்.
இந்த பகைமை உணர்வு நிச்சயம் எல்லோருக்கும் இருக்கும் ஏனெனில் எங்கு ஒரு சண்டை ஆரம்பித்தாலும் அதற்குப் பின்னால் பகை என்ற ஒன்றுதான் காரணமாக இருக்கும்.
இந்த பகை மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் இருக்கிறது. பொதுவாகவே நம் வீட்டில் எல்லாம் யாராவது ஒருவர் சண்டைப் போட்டுக் கொண்டால் கீரியும் பாம்பும் போல சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று சொல்வதுண்டு.
கீரியும் பாம்பும் ஏன் சண்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்று பலருக்கு கேள்வி இருக்கும் அது ஏன் என்பது உங்களுக்கு தெரியுமா? பாம்பு கீரியை எவ்வாறு தாக்குகிறது என்பதை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
கீரி பாம்பை அசுரவேகத்தில் தாக்குகிறது. கீரி பாம்பை தாக்கும் போது ஒரு போராட்ட களத்தையே அங்கே காணலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும் பாம்புகளில் காணப்படும் விஷம் கீரியை பாதிக்காது எனக் கூறப்படுகிறது.
இது தவிர, கீரி மிகவும் சுறுசுறுப்பானது, அது பாம்பிடமிருந்து தப்பிக்க பல வகையான சூழ்ச்சிகளை பின்பற்றுகிறது. மேலும் பொரும்பலான சண்டையில் கீரியே வெல்கிறது.சண்டையில் களைத்துப் போன பாம்பின் தலையை குதறி கொன்று விடுகிறது.
பகைக்கு என்ன காரணம்?
கீரி தனது குட்டிகளை காக்க போராடுகிறது பாம்பை தாக்காமல் விட்டு விட்டால், தன் குழந்தைகளை அதாவது சிறிய கீரிகளை கடித்து தின்றுவிடும் என்று கீரி நினைப்பதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஏனெனில் பாம்புகளுக்கு கீரி குட்டிகளை உணவாக உண்பது மிகவும் பிடிக்கும், இதனால் தான் கீரி தனது குழந்தைகளை காப்பாற்ற பாம்புகளுடன் சண்டையிடுகிறது என அவர்கள் கருதுகின்றனர்.
அதே நேரத்தில், சில ஆய்வுகள் பாம்புகள் மற்றும் கீரிகள் இயற்கை எதிரிகள் என்று குறிப்பிடுகின்றது. பாம்பு கீரியைக் கொல்ல விரும்புகிறது. பாம்பு தான் மட்டுமே வாழ வேண்டும் எனவும் கீரி தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பதே இந்த பகைக்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், இயற்கையான எதிரி என்பதற்கு ஆதரவான வாதத்தை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் கீரி பல சிறிய விலங்குகளை வேட்டையாடுவதில்லை என்றும் ஒரு கருத்து காணப்படுகின்றது.
கீரியின் உடலில் அசிடைல்கொலின் ரிஃப்ளெக்ஸ் உள்ளது. எனவே அது பாம்பு விஷத்தில் இருக்கும் நியூரோடாக்சினில் இருந்து தன்னை பாத்துக்கொள்கின்றது. கீரியின் டிஎன்ஏவில் இருக்கும் ஆல்பா மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் விஷத்தின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள துணைப்புரிகின்றது.
பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பகைக்கு உறுதியான ஆதாரம் இதுவரையில் கிடைக்கவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |