தண்ணீரில் மூழ்குவது போல் கனவு வருதா? என்ன பலன்னு தெரிஞ்சிக்கோங்க
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது.
கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.
கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும். இந்த வகையில் தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன பலன்?
பொதுவாக தண்ணீரில் முழுவது போல் கனவு கண்டால் நீங்கள் பெரும்பாலும் அபசுகுணம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம் ஆனால் அது தவறு ஏனென்றால் நீர் என்பது பஞ்சபூதங்களில் ஒன்றாகும்.
அது நன்மை விளைவிக்கும் கூடிய கனவாகும் எனவே தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை நிம்மதியாக மாறும்.
தொழில் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் வாழ்க்கையை ரீதியாகவும் தனிப்பட்ட விஷயங்களிலும் அனைத்திலும் இருந்த தீய பலன்கள் அனைத்தும் விலகி இனிவரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை அமையப் போகிறது என்பதை உணர்த்துவதாகவே இது அமைகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |