பாத்ரூமில் கருப்பு எறும்பு அதிகமாக இருக்கா? உங்களுக்கு தெரியாத அறிவியல் காரணம்
பொதுவாக வீடுகளில் இனிப்பு பொருட்கள் அல்லது உணவுப் பொருட்கள் கீழே கொட்டி கிடந்தால் அந்த இடத்தில் உடனே எறும்பு நடமாட்டத்தை பார்க்கலாம்.
இனிப்பு சுவைக்காப எறும்புக் கூட்டம் உடனடியாக வந்து விடும். அப்படி கீழே கிடக்கும் உணவுகள் சமைத்த உணவுகள், தண்ணீர் இருக்கிறதா? என்பது குறித்து எல்லாம் எறும்புகளுக்கு பெரிதாக கவலையே இருக்காது.
ஜோதிடத்தின்படி, வீட்டுக்குள் அதிகம் எறும்பு நடமாட்டம் இருந்தால் அதிர்ஷ்டம் என்கிறார்கள். எறும்புகளில் பல வகை இருந்தாலும் வீடுகளில் பார்க்கும் எறும்புகள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இருக்கும்.
நிறத்தை வைத்து இந்த இரண்டு எறும்புகளையும் இனங்கண்டுக் கொள்ளலாம். இந்த இரண்டு நிற எறும்புகளுக்கும் தனித்தனி பண்புகள் உள்ளன.

கருப்பு எறும்பு பெரிதாக தீண்டாது, ஆனால் சிவப்பு எறும்பு கடிக்கும் இயல்பு கொண்டவை. சிலருக்கு சிவப்பு எறும்பு கடித்தால் உடம்பில் சிவப்பு நிற கொப்புளங்கள், அரிப்பு போன்ற ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அப்படியாயின், நீங்கள் பயன்படுத்தும் பாத்ரூமில் அதிகம் எறும்பு நடமாட்டம் இருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
பாத்ரூமில் கருப்பு எறும்பு இருக்கா?
1. குளியலறையில் எப்போதும் ஈரப்பதம் இருந்து கொண்டே இருக்கும். இதனால் எறும்புகள் நடமாட்டம் குழாய்கள், வடிகால்கள் மற்றும் தரைவிரிப்புகளில் இருக்கும்.
2. சோப்பு, ஷாம்பூ, முடி அழுக்கு மற்றும் உணவு பொருட்கள் பாத்ரூமில் சிதறிக் கிடந்தால் எறும்புகள் அதனை சாப்பிடுவதற்காக வரும்.

3. குளியலறை மற்றும் கழிவறைகளில் கழிவுநீர், தேவையற்ற பொருட்கள் மற்றும் பிற குப்பைகள் இருக்கும். அந்த இடத்தில் எறும்புகளை பார்க்கலாம்.
4. சுவர்கள், தரை மற்றும் குளியலறை சாதனங்கள் இருக்கும் இடங்களில் சிறிய விரிசல்கள் மற்றும் குழாய்களில் எறும்புகளை பார்க்கலாம்.

5. வழக்கமாக எறும்புகள் தங்கி இனப்பெருக்கம், உணவு தேடல் மற்றும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு பாதுகாப்பான இடம் தேவை. அதனால் அவை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தை தேடும். எறும்புகளுக்கு வசதியான இடமாக பாத்ரூம் பார்க்கப்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |