என்னது நடிகர் ரஜினிகாந்த் பெயரில் குட்டி கிராமமா? பின்னணி காரணம் இதோ
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் பெயரில் ஒரு குட்டி கிராமம் உள்ளதாம். இதையும் இங்குள்ள மக்கள் பற்றியும் பார்க்கலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த மக்கள் மத்தியில் எப்போதும் வாழும் ஒரு ஸ்டாராக இருக்கிறார். இவர் தென்னிந்திய சினிமா சுமார் 170 நடித்துள்ளார். இவருக்கு இந்தியாவில் மட்டும் ரசிகர்கள் இல்லை.
இவருடைய நடிப்பிற்கும் ஸ்டைலிற்கும் இந்தியாவை தாண்டி வெளிநாட்டிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்க நடிகர் ரஜினிகாந்த் பற்றி நாம் அறியாத விடயம் ஒன்றும் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்
மகாராஷ்டிராவின் புனே அருகில் உள்ள கிராமம் நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாவடி கடேபதர் கிராமம் (Mavadi Kadepathar).
இந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் ரஜிகாந்தை தன்னுடையவர்களில் ஒருவனாக பார்க்கின்றனராம். மேலும் உப்போவாவது ரஜினிகாந் பற்றி ஏதாவது தகவல்கள் இணையத்தில் வெளியாகினால் அதை இவர்கள் பெரும் கொண்டாடமாக கொண்டாடுவார்களாம்.

(நாம் தீபாவளி பொங்கல் கொண்டாவது போல). இந்த கிராமத்து மக்களை பொறுத்தவரை ரஜினியை அவர்களின் மண்ணின் மைந்தனாகவே பார்க்கின்றனர்.
இதனாலேயே இந்த கிராமம் ‘ரஜினிகாந்த் கிராமம்’எனப்படுகின்றது. இந்த கிராமத்து மக்களுக்கு இன்னும் ஒரு நம்பிக்கை உண்டு.ரஜினிகாந்தின் மூதாதையர்கள் தங்கள் மண்ணைச் சேர்ந்தவர் என்று நம்புகிறார்கள்.
நூற்றாண்டுகளுக்கு முன்பு ரஜினி குடும்பத்தினர் கர்நாடகா மாநிலம் விஜயபுரா தாலுகாவில் உள்ள பசவண்ணா பாகேவாடிக்கும், பின்னர் வேலை தேடி பெங்களூருக்கும் குடிபெயர்ந்ததாக அந்த கிராமத்தினர் நம்புகின்றனர்.

இதன் பின்னர் இந்த கிராம மக்கள் 2021-ம் ஆண்டு கிராம மக்கள் பிடிஐ செய்தி நிறுவனத்தின் பேட்டி ஒன்றில் “சினிமாவில் கோலோச்சும் நடிகர் சிவாஜி ராவ் கெய்க்வாட் (ரஜினியின் இயற்பெயர்) எங்கள் மண்ணைச் சேர்ந்தவர்” என்று கூறி உள்ளனர்.
ஆனால் ரஜினிகாந்த் பெங்களூரில் பிறந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. தொடர்ந்து அவர்கள கூறுகையில் “ரஜினிகாந்த் இங்கு படப்பிடிப்புக்கு வரும்போதெல்லாம் அவரை சந்திக்க முயற்சி செய்வோம்.

ஆனால், பாதுகாவலர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. ஒருமுறை ரஜினி தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று அவரை நேரில் பார்த்து எங்களை அறிமுகம் செய்துகொண்டோம்.
நாங்கள் இந்தியில் பேசியபோது, அவர் மராத்தியில் பேச சொன்னார். அவர் மராத்தியை சரளமாக பேசியது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது” என கூறி உள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |