ரவீந்தருடன் மகாலட்சுமி நெருக்கமாக இருக்கும் புகைப்படம்! சுத்தி போடுங்க... புகழும் ரசிகர்கள்
சின்னத்திரை பிரபலங்களில் மறுமணம் செய்துக் கொண்ட ரவீந்தர் - மகாலட்சுமி தம்பதிகளின் ரொமான்டிக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் திருமணம்
சின்னத்திரை பிரபலங்களில் ஒருவரான மகாலட்சுமி, தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
இவர்களின் திருமணத்திற்கு பலர் சார்பில் விமர்சனங்கள் குவிந்தாலும் மிக எளிய முறையில் திருமணம் நடந்தது.
நயன்தாராவின் திருமணத்தை விடவும் இவர்களது திருமணம் பற்றிய பேச்சுதான் அதிகம் இருந்தது என்றால் அது மிகையல்ல.
பணத்திற்காக திருமணம், குண்டான நபருக்கு இவ்வளவு அழகான மனைவியா? என மோசமான விமர்சனங்களும் குவிந்தன.
வைரலாகும் புகைப்படங்கள்
ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் ”நாங்கள் வாழ்ந்து காட்டுவது தான்” ஒரே வழி என திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதற்கிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் ரவீந்தர் அவ்வப்போது எடுக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.
இவர்களின் புகைப்படங்களும் மில்லியன்கணக்காக லைக்ஸ்களை குவிக்கும்.
அந்தவகையில் தற்போது மகாலட்சுமி வெளியிட்ட புகைப்படம் வைரலாகிவருகிறது.