ரொமான்ஸை அள்ளி வீசி ரவீந்தரை வெட்கப்பட வைத்த மகா! வைரல் பதிவு
சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் தனது முதல் மாத திருமண நாளை கொண்டாடிய நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுவிட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரவீந்தர் மகாலட்சுமி ஜோடி
பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் விஜே மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையல், பெரும் வைரலாகியும் வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜே மகாலட்சுமியை தயாரிப்பாளர் ரவீந்தர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்ததோடு, பல போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி அளித்துவரும் ரவீந்தர் தற்போதும் தனது முதல்மாத திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
ரவீந்தர் பதிவிட்டுள்ள பதிவு
ரவீந்தர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மாத Anniversary. எங்களை பார்த்து சிரிக்க மக்களுக்கு 100 காரணங்கள் இருக்கும். ஆனால், எனது சந்தோசத்திற்கு ஒரே ஒரு காரணம் தான். அது நீ. லவ் யூ "முயலு" என ரவீந்தர் குறிப்பிட்டுள்ளார்.
இதில், கமெண்ட் செய்த மகாலட்சுமி, "ஹாப்பி Anniversary அம்மு. எனது மகிழ்ச்சிக்கு காரணம் நீங்கள் தான். லவ் யூ டூ மேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு Reply செய்த ரவீந்தர், "ஐயோ, நான் வெட்கப்படுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு மற்றும் கமெண்ட்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.