"நீ மான் குட்டி.. நான் யானைக்குட்டி".. மனைவி மகாலட்சுமியை வர்ணித்த ரவீந்தர்
மனைவி மகாலட்சுமியுடனான புகைப்படத்தினை வெளியிட்டு தயாரிப்பாளர் ரவீந்தர் பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகின்றது.
தயாரிப்பாளர் ரவீந்தர்
லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வரும் ரவீந்தர் சமீபத்தில் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவருக்கும் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நடிகை நயன்தாராவின் திருமணத்திற்கு அடுத்து பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் தான்.
ஏனெனில் Fatmat என்று அழைக்கப்படும் ரவீந்தர் உடல் எடை அதிகரித்து காணப்படுபவர், ஆனால் மகாலட்சுமி உச்சக்கட்ட அழகில் ஜொலிக்கும் நடிகை என்பதால் இவர்களுக்கு உருக கேலி அதிகமாக கூறப்பட்டது.
இதையெல்லாம் தகர்த்து எரிந்த குறித்த ஜோடி அவ்வப்போது தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தினை புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.
மனைவியை வர்ணித்த பதிவு
திருமணத்திற்கு பின்பு அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இந்த தம்பதிகள், இதற்கு கேப்ஷன்களையும் அட்டகாசமாக கொடுப்பது இன்னும் ஹைலைட்.
அந்த வகையில் ரவீந்தர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தில் மஞ்சள் நிற உடையணிந்திருக்கும் மனைவி மகாலட்சுமியுடன் காரில் அமர்ந்திருக்கிறார் ரவீந்தர்.
இந்த பதிவில்,"நீ மஞ்சள் நிறம் கொண்ட மான் குட்டியோ.. இல்ல மஞ்சள் சுடிதார் போட்ட பெண் குட்டியோ.. ஆனா உன்கூட வாழ்க்கைய ரசிச்சு வாழுற யானைக்குட்டி நான் தான்." என குறிப்பிட்டுள்ளார் ரவீந்தர். இந்த பதிவு நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.