புத்தாண்டை கெனிஷாவுடன் வரவேற்ற ரவி மோகன்! தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி விவாகரத்து சர்ச்சை தான் சமீக காலமாக இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் சர்சையின் முக்கிய புள்ளியான பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் புத்தாண்டை கொண்டாடியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி புதிய புயலை கிளப்பி வருகின்றது.

ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்த நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இவரின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில் இருந்தே பாடகி கெனிஷா தொடர்பான சர்ச்சையும் ஆரம்பமாகியது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.

ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து இருவரும் ஜோடியாக கலந்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை உண்மையாக்கியது.
ஆர்த்தியை பிரிய வேண்டும் என்பதில் ரவி மோகன் இவ்வளவு பிடிவாதமாக நின்றதற்கு காரணமே, 'அவருக்கு ஆர்த்தியும், அவரது தாயும் கொஞ்சம்கூட மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் என்பதை ரவி மோகன் பல இடங்களில் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இது குறித்து உண்மையாக காரணம் சரியாக தெரியவில்லை. குழந்தைகளுடன் ஆர்த்தி தனியான வாழ்ந்து வருகின்றார்.

இது ஒருபக்கம் இருக்க ஆர்த்தியுடனான பிரிவுக்கு பின்னர் கெனிஷாவுடன் அதிக நெருக்கம் காட்டிவருகிறார் ரவி.இரண்டு பேரும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜோடியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் புத்தாண்டை கொண்டாடி நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இணையத்தில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
. @iam_RaviMohan & #Keneeshaa begin the New Year on an auspicious note ✨
— Ramesh Bala (@rameshlaus) January 1, 2026
Ravi Mohan is all set to make 2026 exciting with a promising lineup - Parasakthi, Genie, KaratheyBabu, BroCode, and his much-awaited directorial debut AnOrdinaryMan. 🔥🎬 pic.twitter.com/ua6ovKn2MR
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |