300 ஆண்டுகளாக சாய்ந்த வண்ணமாக இருக்கும் சிவன் கோவில்: பின்னணியில் இருக்கும் சாபம்!
பொதுவாகவே ஒவ்வொரு கோவில்களும் ஒவ்வொரு இதிகாசங்களும் பழமையும் பெருமையும் இருக்கும். அதிலும் சில கோவில்கள் பரிகாரங்களுக்காகவே கட்டப்பட்டவை.
அந்தக் கோவில்களில் ஒவ்வொருவரும் செய்த பாவங்களுக்கும் சாபங்களுக்கும் பரிகாரமாக பாத யாத்திரை, தல யாத்திரை சென்று வழிபடுவது வழக்கம்.
ஆனால் ஒரு கோவிலுக்கு சாபம் விழுந்தால் எப்படி இருக்கும் அந்த சாபத்தின் விளைவாக என்ன நடந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரிந்துக் கொள்ள வேண்டுமா?
சபிக்கப்பட்ட கோவில்
வாரணாசியில் உள்ள தர்கேஷ்வர் மஹாதேவ் மந்திர் முன் மணிகர்னிகா காட்டில் அமைந்துள்ள ரத்னேஷ்வர் மகாதேவ் கோயில் வாரணாசியின் சாய்ந்த கோயில் என்றும் புகழ் பெற்றது.
இந்தக் கோவிலை காசி கர்வத் என்றும் அழைக்கப்பார்கள் அதாவது காசி என்பது வாரணாசியின் பழங்காலப் பெயர் மற்றும் ஹிந்தியில் கர்வத் என்றால் சாய்ந்திருக்கும் என்று பொருள்படும்.
இந்தக் கோவிலானது ராஜா மான் சிங்கின் பெயரிடப்படாத வேலைக்காரனால் அவரது தாயார் ரத்னா பாய்க்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோவிலின் சிகரம் நகர சிகர பாணியில் தூண்களால் அலங்கரிக்கப்பட்ட பாம்சனா மண்டபத்துடன் கட்டப்பட்டது.
வாரணாசியில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள மற்ற அனைத்து கோயில்களைப் போலல்லாமல், இந்த கோயில் மிகவும் தாழ்வான மட்டத்தில் கட்டப்பட்டுள்ளது, இதனால் மழைக்காலங்களில் கோயிலின் சிகாரா பகுதியை நீர் மட்டம் அடையும்.
இக்கோயிலின் கருவறை ஆண்டு முழுவதும் ஆற்றின் அடியில் இருக்கும் படி தான் கட்டப்பட்டுள்ளது.
சாபத்தின் விளைவா?
வாரணாசியில் இருக்கும் இந்தக் கோவில் 9டிகிரி வரை சாய்ந்து தான் உள்ளது. இது பல ஆண்டுகளாக சாய்ந்துதான் இருக்கிறது என பேசப்பட்டு வருகிறது.
மேலும், இவ்வாறு சாய்ந்து இருப்பதற்கு இந்தக் கோவில் மேல் இருக்கும் ஒரு சாபம் தான் என சொல்லப்படுகிறது.
அதாவது மராட்டியப் பேரரசின் ராணி அஹில்யா பாய் ஹோல்கரின் ரத்னா பாய் என்ற பெண் ஊழியரால் கட்டப்பட்டது. அந்தப் பணிப்பெண்ணின் கோவிலுக்கு ராணியின் பெயரை வைக்காமல் ரத்னா என்ற தன் பெயரை வைத்தனால் ராணி அஹில்யா இந்த கோவிலுக்கு சாய்ந்துப்போகும் படி சாபம் கொடுத்திருக்கிறார் இதனால் தான் இந்த கோவில் சாய்ந்தப்படி உள்ளது என சொல்லப்படுகிறது.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கோவில் நீர் இருக்கும் பகுதியில் கட்டப்பட்டிருப்பதால் நில அரிப்பு எற்பட்டு கோவில் ஒரு பக்கம் சாய்ந்து இருக்கிறது என்று சொல்கிறார்கள்.