தனது வீட்டு சமையல்காரருக்கும் சொத்தில் பங்கு... ரத்தன் டாடா எழுதி வைத்த உயில்
தொழிலதிபர் ரத்தன் டாடா தனது மறைவிற்கு முன்பு தனது சொத்துக்கள் குறித்து உயில் எழுதி வைத்துள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடா
இந்தியாவில் மிக முக்கிய தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா, கடந்த 9ம் தேதி உடல்நல குறைவினால் மரணமடைந்தார்.
ரத்தன் டாடா பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மும்பையில் ஒரு மின் மயானத்தில் அடங்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் ரத்தன் டாடா தனது சொத்துக்கள் குறித்த உயில் ஒன்றினை எழுதி வைத்துள்ளாராம். அதில் அவருடைய இளம் நண்பர் ஷாந்தனு நாயுடு முதல் வீட்டுப் பணியாளர் வரை அனைவருக்கும் கோடிக்கணக்கில் உயில் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளாராம்.
முன்னதாக, அவர் கொலாபாவில் வசித்து வந்த வீடு 10 ஆயிரம் கோடி மதிப்புடையது. இது தவிர மும்பை ஜூகுதாரா சாலையில் இருக்கும் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, அலிபாக்கில் 2,000 சதுர அடி கொண்ட பீச் பங்களா, ரூ.350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் பல்வேறு சொத்துக்கள் உள்ளது.
இவர் தனது வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெபர்டு வகை நாயை வளர்த்து வந்தார். டிட்டோ என்று பெயர் கொண்ட இந்த நாயினை நன்றாக பராமரிக்க உயிலில் சொத்து எழுதிவைத்துள்ளாராம்.
ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் சேவை செய்து வந்த பணியாளர் சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி உள்ளார்.
இவர்களில் சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் 30 ஆண்டுகால பந்தம் உள்ளதாகவும், வெளிநாடு சென்று வந்தால் சுப்பையாவிற்கு ஆடைகள் வாங்கி வருவதையும் ரத்தன் டாட்டா வழக்கமாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |