உடல்நிலைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தொழிலதிபர் ரத்தன் டாடா
டாடா சன்ஸ் முன்னாள் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா திடீர் உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரத்தன் டாடா
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா தீிடீரென மருத்துவனைக்கு சென்ற தகவல் தற்போது மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இணையத்தில் தற்போது இத பற்றிய தகவல்கள் வரும் போது வதந்திகளாக வருகின்றது.
இந்த வதந்தியான செய்திகளின் வதந்திக்கு ரத்தன் டாடா தனத இன்டாகிராம் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இந்த பதிவில் “எனது உடல்நிலையைப் பற்றிய சமீபத்திய வதந்திகள் உண்மையில்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
எனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக தற்போது மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுகிறேன். கவலை படும் அளவிற்கு எதுவும் இல்லை. நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.
என்னைப்பற்றி யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.இதன் 5லம் ரத்தன் டாடா வயதாகியதால் மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரிகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |