தைத்திருநாளில் என்ன செய்தால் அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை பலன்கள்
Today Rasi Palan
By Pavi
ஜனவரி 15, 2026 தை முதல் நாளான இன்று 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
தைதிருநாள் 12 ராசி பலன்

மேஷம்
- தை முதல் நாளான இன்று புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். நீண்ட நாள் கனவுகள் நனவாகத் தொடங்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 9, 1
- அதிர்ஷ்ட நிறம்: அடர் சிவப்பு
- பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.
ரிஷபம்
- இன்று மிகவும் நிதானமாகச் செயல்பட வேண்டிய நாள்.
- பேச்சில் கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள் வரலாம் என்பதால் சிக்கனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
- நண்பர்களால் உதவி கிடைக்கும்.
- ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 6, 2
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
- பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டோத்திரம் வாசிப்பது சிறந்தது.
மிதுனம்
- இன்றைய நாள் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும்.
- எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும்.
- வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
- பயணங்களால் நன்மை கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 5, 3
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை
- பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
கடகம்
- தை முதல் நாள் நல்ல நாளாக அமையும்.
- திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நடக்கும்.
- தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.
- வீடு, வாகன சேர்க்கைக்கு வாய்ப்புள்ளது.
- உத்தியோகத்தில் பதவி உயர்வு; செல்வாக்கு உயரும்.
- அதிர்ஷ்ட எண்: 2, 7
- அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
- பரிகாரம்: சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யவும்.
சிம்மம்
- இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக அமையும்.
- அரசாங்க ரீதியான உதவிகள் எளிதில் கிடைக்கும்.
- தந்தையின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
- சமூகத்தில் மதிப்பு அதிகரிக்கும். புதிய முதலீடுகள் பலன் தரும்.
- அதிர்ஷ்ட எண்: 1, 9
- அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
- பரிகாரம்: சூரிய பகவானுக்கு நீர் சமர்ப்பித்து வழிபடவும்.
கன்னி
- கடின உழைப்பால் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.
- மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கவும்.
- குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபரிடம் பகிர்வதைத் தவிர்க்கவும்.
- பணியிடத்தில் வேலைப்பளு குறையும். சுபச் செய்திகள் கிடைக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 5, 8
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை
- பரிகாரம்: விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்கவும் அல்லது பாராயணம் செய்யவும்.
துலாம்
- இன்று வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவும்.
- புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.
- கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
- பணப்புழக்கம் அதிகரிக்கும். மன நிம்மதி கூடும்.
- அதிர்ஷ்ட எண்: 6, 4
- அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
- பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கவும்.
விருச்சிகம்
- தை மாத முதல் நாளான இன்று எதிர்ப்புகள் விலகும்.
- கடன் சுமைகள் குறையத் தொடங்கும்.
- உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
- நீதிமன்ற வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.
- உடல் ஆரோக்கியம் சீராகும்.
- அதிர்ஷ்ட எண்: 9, 3
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
- பரிகாரம்: முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
தனுசு
- குழந்தைகளால் பெருமை சேரும்.
- பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
- ஆன்மீகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
- புத்திசாலித்தனம் பளிச்சிடும். லாபகரமான நாள்.
- அதிர்ஷ்ட எண்: 3, 1
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
- பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
மகரம்
- பொறுமையைக் கடைபிடிக்க வேண்டிய நாளாகும்.
- அசையா சொத்துக்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தள்ளிப்போகலாம்.
- தாயின் ஆசி கிடைக்கும். இன்று உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- எடுக்கும் காரியங்களில் நிதானம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 8, 5
- அதிர்ஷ்டநிறம்: கறுப்பு, அடர் நீலம்
- பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடவும்.
கும்பம்
- இன்றைய தினம் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள்.
- சகோதர வழியில் அனுகூலம் உண்டாகும். குறுகிய காலப் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் லாபம் உண்டு.
- வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
- மன நிம்மதி கிடைக்கும் உற்சாகமான நாளாகும்.
- அதிர்ஷ்ட எண்: 8, 4
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்
- பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபடவும்.
மீனம்
- இன்று சொல்வாக்கும், செல்வாக்கும் உயரும் நாளாக அமையும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
- குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழிலில் லாபம் பெருகும்.
- பண வரவு திருப்தி தரும்.
- அதிர்ஷ்ட எண்: 3, 2
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
- பரிகாரம்: வயதானவர்களுக்கு, ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்யவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US