விராட் கோலி சாதனையை முறியடித்த ராஷ்மிகா திருமண புகைப்படம்! ஆசியாவிலேயே முதலிடம்
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தங்கள் திருமண புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்துள்ளனர். குறித்த விடயம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்தபோது காதலிக்க ஆரம்பித்தார்கள்.

அவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தார்கள்.
இந்நிலையில்,விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த 26 ஆம் திகதி உதய்பூரில் உள்ள பிரம்மாண்ட மாளிகையில் நடைப்பெற்றது.

திருமண போட்டோக்கள் எதுவும் லீக் ஆக கூடாது என்பதால் கெஸ்ட் ஆக வந்தவர்கள் போன்களை கவர் போட்டு மூடி சீல் வைத்து இருந்தனர்.
அதன் பின் திருமண போட்டோக்களை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு இருந்தனர்.

ராஷ்மிகாவின் இன்ஸ்டா கணக்கில் பதிவிட்ட திருமண போட்டோக்கள் வந்திருக்கும் லைக்குகள் மூலமாக புது சாதனை படைத்திருக்கிறது. இதுவரை விராட் கோலி உலகக்கோப்பை உடன் பதிவிட்ட போட்டோவுக்கு 22 மில்லியன் லைக்குகள் வந்தது தான் சாதனையாக இருந்தது.
ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகியோரின் திருமணப் படங்கள் இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளைப் பெற்ற பதிவு என்ற சாதனையைப் படைத்துள்ளன.

48 மணி நேரத்திற்குள், ராஷ்மிகாவின் திருமண பதிவு 25 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது, இது கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை வென்ற பதிவின் முந்தைய சாதனையை முறியடித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |