விஜய் பட நடிகையையுடன் டேட்டிங் செய்யும் விஜய் தேவரகொண்டா- ஹோட்டலில் சிக்கிய Video
விஜய் தேவரகொண்டாவுடன் ராஷ்மிகா மந்தனா ஹோட்டலுக்கு சென்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna).
இவர், தமிழில் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக செய்தி வெளியாகி வருகின்றது. ஆனால் இருவரும் தங்களின் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இருவரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் மூலம் ரசிகர்களிடம் சிக்கிக் கொள்வார்கள்.
காதலை உறுதிச் செய்தாரா?
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் புஷ்பா 2 படத்தின் விழா ஒன்றில், உங்களுடைய வருங்கால கணவர் சினிமாவை சேர்ந்தவரா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கொடுத்த ராஷ்மிகா மந்தனா "அது எல்லாருக்கும் தெரியும்" என கூறினார்.
இவர் இப்படி கூறுவதற்கு முன்னர், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து உணவு உண்ணும் புகைப்படம் வெளியானது. அதே போன்று மாலைதீவில் இருவரும் சென்ற போது எடுத்துகொண்ட புகைப்படங்களும் வைரலானது.
ஹோட்டலில் சிக்கிய பிரபலங்கள்
இந்த நிலையில் தற்போது நடிகை ராஷ்மிகா தனது முகத்தை மறைத்து பிரபல ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த போட்டோ கலைஞர்கள், ராஷ்மிகா அடையாளம் கண்டு அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.
ராஷ்மிகா உள்ளே சென்று சில நிமிடங்களிலேயே ஹோட்டல் பின்புறமாக இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டா மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து ஹோட்டல் உள்ளே சென்றார்.
இருவரும் உள்ளே சென்ற காணொளியை போட்டோ கலைஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வேளையில், ரசிகர்கள் “இவர்கள் காதலிக்கிறார்களா?” எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Love them so much 😍 @TheDeverakonda @iamRashmika#VijayDeverakonda #RashmikaMandanna#Virosh ♥️♥️ pic.twitter.com/aS4eVYKDEF
— YUVRAJ (@yuvraj0410) March 30, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |