காலில் கட்டுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா... என்ன நடந்தது தெரியுமா?
காலில் கட்டுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புதிய பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக கொடிக்கட்டி பறப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.
ரசிகர்களின் கனவு கன்னியாக திகழும் இவரை அனைவரும் நேஷனல் கிரஷ் என கொண்டாடி வருகின்றனர்.
தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அவரின் நடிப்பில் வெளியான 'புஷ்பா 2', திரைகப்படம் வசூல் வெறியாட்டம் ஆடியது.
உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து, இந்திய சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் திரைப்படமாக புஷ்பா 2 மாறியுள்ளது.
சினிமாவில் மாத்திரமன்றி சமூக வளைத்தளங்களிலும் அதிக ஆர்வம் காட்டிவரும் ராஷ்மிகா தற்போது காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த பதிவில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது தனக்கு காலில் அடிபட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |