படப்பிடிப்பு தளத்தில் வாக்குவாதம் செய்து கோபத்தோடு வெளியேறிய ராஷ்மிகா - வைரலாகும் வீடியோ
படப்பிடிப்பு தளத்தில் கோபமடைந்து வெளியேறிய ராஷ்மிகாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கோபமடைந்து வெளியேறிய ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்தது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா, அகமதாபாத் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
படப்பிடிப்பு தளத்தில் கோபமடைந்த ராஷ்மிகா அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்து விட்டு செட்டை விட்டு வெளியேறினார். இதை அங்கிருந்தவர்கள் யாரோ வீடியோவாக எடுத்த சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அம்மாடியோ... உங்களுக்கு இவ்வளவு கோபம்லாம் வருமா... என்று கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பில் அவர் கோபமடைவது போல் நடிப்பை வெளிப்படுத்தினார் என்பது பின்னர் தெரியவந்தது.
Note : This is just a ad. This one is not to any directors or producers or any industry ??
— Rashmika Karnataka Fc ? (@RoshKarnatakaFc) May 26, 2023
Everyone thought your angry with some team in shoot.. So natural acting @iamRashmika
By the way. Your also doing movies know
Give us some update about movies re#RashmikaMandanna pic.twitter.com/UPokUejXj6